இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு வலயத்தில்
இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
தொலைத்தொடர்பு அதிகார சபையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மாலைத்தீவு பிரஜை ஒருவரும் மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 50 மில்லியன் ரூபா மதிப்பிலான ஒளிபரப்பு உபகரணங்கள், செயற்கைக்கோள் சாதனங்கள் மற்றும் ஸ்டார்லிங்க் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
செயற்கைக்கோள் மூலம் அலைவரிசைகளைப் பதிவிறக்கம் செய்து, இலங்கை மற்றும் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சேவைகள் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

