வடமேல் மாகாணத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் தவணைப் பரீட்சைகளின்
திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வித் திணைக்களம்
அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (15) முதல் ஜூலை 20ஆம் திகதி வரை நடைபெறவிருந்த
பரீட்சைகள், ஜூலை 21ஆம் திகதி முதல் ஜூலை 24ஆம் திகதி வரை
நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 9ஆம் தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள்
ஜூலை 9 முதல் 17ஆம் திகதி வரையும், 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான
பரீட்சைகள் ஜூலை 9 முதல் 20ஆம் திகதி வரையும் நடத்துவதற்கு முன்னர்
திட்டமிடப்பட்டிருந்தன.
எனினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக திட்டமிட்ட காலப்பகுதியில்
பரீட்சைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வடமேல் மாகாண
பிரதான அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதான செயலாளர் ஆகியோரின்
தீர்மானத்துக்கு அமைய நான்கு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பரீட்சை கால அட்டவணை இன்று (14) வெளியிடப்படும் என
வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

