யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர்,
பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்
இடம்பெற்நுறுள்ளது
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்காக நேற்று யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு
அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில்இ பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது
திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸார் அவரை உடனடியாக மீட்டு யாழ்ப்பாண
போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி
அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

