திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை (20) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர் ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கெப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இந்த
விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

