முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரை உள்ள கடற்பகுதிகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட கடல் எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவித்தல் இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன்,
நாளை (03) முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது
மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும்,
கடல் நிலை கொந்தளிப்பாக காணப்படும் வாய்ப்பு இருப்பதாகவும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் பணிகளில் ஈடுபடும்வர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

