நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை வீசிய கனமழை மற்றும்
பலத்த காற்றால், மேல் இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது
பெரிய மரம் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்
காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு
வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பலத்த காற்றால் மரங்கள் முறிந்து வீடுகளுக்கும் உடைமைகளுக்கும்
சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

