2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
அடுத்த வார நிறைவுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின்
ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தம் மற்றும் பெறுபேறுகள் ஒழுங்கமைக்கும் இறுதிக்கட்ட
பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள்
கல்வி நாட்காட்டியின்படி திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே நடைபெறும் என
கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படாதவாறு, தேவையானால்
மேலதிக நேரம் ஒதுக்கி கற்பித்தலை நிறைவு செய்யுமாறு அனைத்து
பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

