Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை

2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ‘ மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.

அதன்படி, தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் அடிப்படையில்,  உயர்தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையான நாட்களின் எண்ணிக்கை 300 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்,  2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல்,
ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கிடைக்கப்பெறுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்குத் தோற்றவுள்ள
மாணவர்களுக்கு,  கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து இம்முறை பரீட்சை ஆரம்பமாகும் நாள் வரையில் 4 மாதங்களும்
10 நாட்களும் இடைவெளி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கத்
திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments