Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது

ஜனவரி மாத தொடக்கம் முதல் கடந்த 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
11 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் மொத்தம் 1,104,354 சுற்றுலாப் பயணிகள்
நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஜூன் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை மட்டும் 82,332 பேர் இலங்கைக்கு
வந்துள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இவ்வருடம் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து
வருகை தந்துள்ளனர். இரண்டாம் இடத்தில் ஐக்கிய இராச்சியம்,
மூன்றாம் இடத்தில் சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மாதாந்திர அளவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை பெற்ற மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments