மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதி அபாய வலயங்களை உள்ளடக்கும் வகையில்
இன்று (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
சுகாதாரப் பிரிவினர், முப்படைகள், பொலிஸார், மாவட்ட செயலகங்கள்,
பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள்
உள்ளிட்ட பல அரச மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத் தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டெங்கு ஒழிப்புக்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன்,
மேல் மாகாணத்தின் 23 டெங்கு அதி அபாய வலயங்களையும் உள்ளடக்கும்
வகையில் இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

