டிட்வா அனர்த்தத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில்
வீடுகளை இழந்த மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்த
வீட்டு வாடகை கொடுப்பனவு மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள
வரவுசெலவுத்திட்ட சுற்றுநிரூப அடிப்படையில் இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

