இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள மாடி வீட்டுத்
தொகுதி ஒன்றில் இன்று (19) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த மாடி வீட்டுத் தொகுதியின் இரண்டாவது மாடியில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு சேவை திணைக்களம்
இரண்டு தீயணைப்பு வாகனங்களை உடனடியாக சம்பவ இடத்துக்கு
அனுப்பியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் தீ
முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெஹிவளை
தீயணைப்புப் பிரிவும் தீயணைப்பு சேவை திணைக்களமும் தெரிவித்துள்ளன.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில்
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

