Sunday, August 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் சட்டவிரோதமாக சங்கு சேமித்து வைத்திருந்த இருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கைதுசெய்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் ‘விஜய’ நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  ஜூலை 30ஆம் திகதி
கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது

இதன்போது,  சந்தேகத்திற்கிடமான இரண்டு வீடுகள் சோதனையிடப்பட்டதில்,
சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட 70 மில்லிமீட்டர் சுற்றளவை விடக் குறைவான
சங்குகள் அடங்கிய 46 மூடைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றை வைத்திருந்த
இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 54 வயதுடைய கற்பிட்டி பகுதியைச்
சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சங்கு தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments