Tuesday, August 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில்
இன்று (03) எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்
அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரணைமடு குளத்தை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் வழங்கிய
தகவலின் அடிப்படையில்இ சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார்
மற்றும் தடயவியல் பொலிஸ் நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுஇ முக்கிய சான்றுகள்
சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர்,  சடலம்
உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவும் உயிரிழந்த நபரின் அடையாளத்தை
உறுதிப்படுத்துவதற்காகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த மரணம் திட்டமிட்ட கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments