Monday, August 17, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்இத்தாலியில் 770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலியில் 770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற
ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள
4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும்,  பாதுகாப்பு மற்றும்
எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்,
பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும்
கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு விட்டுச்
சென்றுள்ளனர். இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments