பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக தனது 94 ஆவது வயதில் காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகை சவுகார் ஜானகி காலமானதாக
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக
அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு
மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.

