சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பிரித்தானியாவில்
மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால்
நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது
உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட
வேண்டும் என்றும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும்
போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து பிரித்தானிய
பிரதமரின் அலுவலகமான 10 னுழறniபெ ளுவசநநவ நோக்கி போராட்டக்காரர்கள்
மாபெரும் பேரணியாகச் சென்றனர்.
இதன்போது, எமது உறவுகள் எங்கே?, அவர்களுக்கு என்ன நடந்தது?இ உண்மை
வெளிவரும் வரை…, நீதி கிடைக்கும் வரை… எமது போராட்டம் தொடரும்..
உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலைகள்
மற்றும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை சித்தரிக்கும் வகையில் வீதி
நாடகங்களும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றன.
இந்த வீதி நாடகங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்கள் மூலம், காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொண்டுவரும் வேதனை மற்றும்
நீண்டகாலமாக நீடித்து வரும் நீதிக்கான கோரிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற
கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர்.

