கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல சந்திக்கு அருகாமையில்
நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட இளைஞரை அவதானித்த
பொதுமக்கள், அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர்
இதனையடுத்து, அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்ட போதிலும்இ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த
சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்பொட மற்றும் நுவரெலியா
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தாக்குதலுக்குள்ளான நபரை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றுவதற்கு உதவியவர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின்
பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

