Friday, September 18, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதெமட்டகொட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

தெமட்டகொட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

தெமட்டகொட ‘கலு பாலம்’ அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்
காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில்
உயிரிழந்துள்ளார்.

இன்று (17) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும்இ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி தனது வண்டியில் பயணித்துக்
கொண்டிருந்தபோது சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் அல்லது அதில் ஈடுபட்ட நபர்கள்
குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments