Saturday, September 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் வைத்தியர்
ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (25)
சான்றுரைப்படுத்தினார்.

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான
இரண்டாவது மதிப்பீடு விவாதம் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள்
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுஇ மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால்
நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை
65 இலிருந்து 67 ஆகவும்,  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகின்றது.

அத்துடன்,  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து
24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையும்
திருத்தப்படுகின்றது.

இதற்கு அமைய, பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக
நிறைவு செய்வதுடன்,  வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய
தேவை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம்
திருத்தச் சட்டமாக அமுலுக்கு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments