Wednesday, October 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஉருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி போராட்டம்

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்
நீதியான விசாரணை கோரி இன்று (7) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி உருத்திரபுரம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது
உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவானது.

அத்துடன் உயிரிழந்த சிறுமி எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும்
மீட்கப்பட்டிருந்தது.

தன்னுடைய படம் ஒன்றைக் காட்டி,  தன்னை தவறான உறவுக்கு வருமாறு
அயல்வீட்டு இளைஞர் ஒருவர் வற்புறுத்தி வந்ததாக உயிரிழந்த சிறுமி அந்தக்
கடிதத்தில் எழுதியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

எனினும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்வதுடன் நீதியான
விசாரணைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி,  உருத்திரபுரம்
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று
முன்னெடுக்கப்பட்டது.

பழைய மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்தக்
கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்று
தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
நளாயினி இன்பராஜிடம் கையளித்திருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments