Friday, October 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசங்கானையில் புதிய மதுபானசாலைக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்

சங்கானையில் புதிய மதுபானசாலைக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்

யாழ். வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் புதிதாக மதுபானசாலை திறப்பதற்கு
வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (09) சங்கானை பேருந்து
நிலையத்திற்கு முன்பாகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு புதிய மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளதாக
வெளியான தகவல்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்
மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய மதுபானசாலைகள் திறக்கப்படுவதால் சமூகப் பிரச்சினைகள், குடும்ப
வன்முறைகள் அதிகரிப்பதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படலாம் எனப்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மதுபானசாலை அமைக்கப்படவுள்ள இடத்திற்கு அருகில் பாடசாலை,
பிரதேச செயலகம், சந்தைகள் மற்றும் கடைத்தொகுதிகள் அமைந்துள்ளதால்,
அவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினர்.
வலிகாமம் மேற்கு பகுதியில் ஏற்கனவே மூன்று மதுபான நிலையங்கள்
உள்ளதாகவும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் பின்னர் பேரணியாகப் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள்,
புதிய மதுபானசாலைக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ச. ஜெயந்தன்,
பிரதேச சபை உறுப்பினர்கள், வட பிரதேச நல்லொழுக்க சமூகத்தினர்,
சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும்
பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments