Sunday, October 11, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று (11) ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்
ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.41 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம்,  ரிச்டர்
அளவுகோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு திணைக்களம்
தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 181 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்
கொண்டிருந்ததாகவும்,  36.740 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 71.484 டிகிரி
கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  இன்று மதியம் 12.34 மணியளவில் ரிச்டர் அளவுகோலில்
4.1 ஆகப் பதிவான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி
மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும்,  இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட
சேதங்கள் அல்லது பாதிப்புகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள்
இதுவரை வெளியாகவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments