Sunday, October 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

மேல்,  சபரகமுவ, மத்திய,  ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் உள்ளிட்ட
பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல்
திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (11) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (12)
அதிகாலை 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  குறித்த மாகாணங்களிலும் அனுராதபுரம்,  மன்னார் மற்றும் வவுனியா
மாவட்டங்களின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த
காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே,  மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments