Sunday, October 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாவலப்பிட்டி விருந்துபசாரத்தில் 12 பேர் கைது

நாவலப்பிட்டி விருந்துபசாரத்தில் 12 பேர் கைது

நாவலப்பிட்டி,  சமனலகம பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசாரமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்,  12 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்களை அழைத்து,  நாவலப்பிட்டி
பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த விருந்து உபசாரத்தை ஏற்பாடு
செய்திருந்ததாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து,  வாடகைக்கு விடப்படும் குறித்த இடத்தில் பொலிஸார் திடீர்
சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, அங்குள்ள இரண்டு அறைகளில்
தங்கியிருந்த 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும்,
அவர்கள் கட்டுநாயக்க,  தியசென்புர,  நீர்கொழும்பு மற்றும் மெதிரிகிரிய ஆகிய
பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 490 மில்லிகிராம் ஹஷிஷ்,  140 மில்லிகிராம் ஐஸ்
போதைப்பொருள்,  320 மில்லிகிராம் கொக்கெய்ன்,  ஹஷிஷ் சுருட்டுகள் மற்றும்
இறக்குமதி வரி செலுத்தப்படாமல் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள்
ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments