Monday, October 12, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாகொட துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு

நாகொட துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு

களுத்துறை,  நாகொட பகுதியில் உணவகம் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த உணவக உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி காலை 7.40 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,
குறித்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிப்
பிரயோகம் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த
நிலையில்,  படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின்
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என
அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவே​ள​ இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நேற்றைய தினம்
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments