யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, இணுவில் சந்தியில் இன்று (22) அதிகாலை
இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில்
இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவரே உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

