ஹட்டன் பன்மூர் பகுதியில் உள்ள குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தையொருவரரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த
58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனத் அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில காலமாக கடை ஒன்றை நடத்தி வந்துள்ளதாக முதற்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.
குளக்கரையிலிருந்து உயிரிழந்தவரின் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாதணிகள் பணப்பை, குடை ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

