Thursday, October 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசலே மனு மீதான இடையீட்டு மனுக்கள் நிராகப்பு

சலே மனு மீதான இடையீட்டு மனுக்கள் நிராகப்பு

அரச புலனாய்வுச் சேவையின்  முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் தலையிட அனுமதி கோரி,  பௌத்த பிக்குகள் குழுவொன்று தாக்கல் செய்த இடைமனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) தள்ளுபடி செய்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுரேஷ் சலே இந்த ரிட் மனுவைத் தாக்கல்
செய்திருந்தார்.

இந்நிலையில்,  வெங்கமுவே நலக்க தேரர் உள்ளிட்ட சில பௌத்த பிக்குகள்,
குறித்த வழக்கில் நீதிமன்றத்தின் முன் தமது கருத்துகளை முன்வைக்க அனுமதி
கோரி இடைமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

எனினும், அந்த இடைமனுக்களைத் தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments