சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மொலகொட, கொடமுதுன்கல
ரஜமஹா விகாராதிபதிஇ அக்கமஹா பண்டித சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே
சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கல்லேல்லே சுமனசிறி தேரரிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) முற்பகல் கையளிக்கப்பட்டது.
சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் இதற்கு முன்னர் இலங்கை
ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உபவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.

