Friday, October 23, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் இரத்து: இண்டிகோ நிறுவனம்

சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் இரத்து: இண்டிகோ நிறுவனம்

சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு,
அந்நாட்டுக்கான விமான சேவைகளை இரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம்
அறிவித்துள்ளது

சவூதி அரேபியா விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல் அதிகரித்து
வருவதால்,  விமான சேவைகளை பிற இந்திய விமான நிறுவனங்களும் ஏற்கனவே
இரத்து செய்துள்ளன.

இந்நிலையில்,  ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள்
அனைத்து வழித்தடங்களிலும் 24ஆம் திகதி வரை விமான சேவைகளை
நிறுத்தியுள்ளன.

ஆகாசா ஏர் நிறுவனம் 27ஆம் திகதி வரை அனைத்து வழித்தடங்களிலும் விமான
சேவைகளை இரத்து செய்துள்ளது.

அவசரமாக சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற வேண்டிய இந்தியர்கள், தேவையான விசாக்களைப் பெற்றிருந்தால் பஹ்ரைன்இ குவைத் அல்லது கட்டார்
வழியாகப் பயணம் செய்யலாம் என இந்திய தூதரகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments