Saturday, October 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிக்குகளுக்காக சிறைச்சாலைகள் திணைக்களம் புதிய சுற்றறிக்கை வெளியீடு

பிக்குகளுக்காக சிறைச்சாலைகள் திணைக்களம் புதிய சுற்றறிக்கை வெளியீடு

பிக்குகளைச் சிறைச்சாலைகளுக்கு வெளியே அழைத்துச் செல்வது தொடர்பாக,
ஜனாதிபதி குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக,  சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட
உள்விவகாரச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்,  சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தப் பரிந்துரைகளை வர்த்தமானியில் வெளியிடவோ அல்லது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவோ அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழு அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பை நிர்வகிக்கும் பிரதான சட்ட ஆவணமாக 1877 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் விளங்குகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமையான இந்தச் சட்டம்,
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் நியமனம் உள்ளிட்ட சிறைச்சாலை
அதிகாரிகளின் நியமனங்கள்இ கடமைகள் மற்றும் அதிகாரங்களும் இந்தச் சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

கைதிகளின் ஒழுக்கம் மற்றும் பராமரிப்பு சிறையில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் சுகாதாரம்,  உணவு,  ஒழுக்கம்,  பாதுகாப்பு மற்றும் அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது தொடர்பான விதிமுறைகளும் இந்தச் சட்டத்தில் உள்ளடங்குகின்றன.

தற்போதைய சமூகத் தேவைகளுக்கும் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கும் ஏற்ப,  பழைய சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சிறைச்சாலை நிர்வாகச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறைச்சாலைகள் தொடர்பான சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளைப் புதுப்பிப்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments