Wednesday, October 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாமலின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

நாமலின் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

க்ரிஷ் கட்டிடம் நிர்மாணம் தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு
மீதான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு
நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும்
நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை
ஆராய்ந்த பின்னர்,  கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம
இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ் வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள
காணியை,  கலப்பு பயன்பாட்டு அபிவிருத்தித் திட்டத்திற்காக க்ரிஷ் குழுமத்திற்கு
மாற்றுவதற்கு உதவியதற்காக 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக்
கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  அவரது பிணை மனு மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு நவம்பர் 3ஆம்
திகதி அறிவிக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments