கடவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார்
இன்று (31) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கடவத்தை – மஹாகடை சந்தையில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி குறித்த
முச்சக்கரவண்டி பயணித்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 16 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

