Saturday, October 31, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசூனிய பொம்மை குறித்து ஜனாதிபதி தெரிவித்த விடயம்

சூனிய பொம்மை குறித்து ஜனாதிபதி தெரிவித்த விடயம்

களிமண் உருவங்களில் ஊசிகளைச் செருகுவது உள்ளிட்ட,  போராட்ட முறைகளைக்
கையாளும் சில எதிர்க்கட்சிக் குழுக்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
விமர்சித்தார்.

அத்தோடு,  அத்தகைய செயல்களின் பின்னணியில் உள்ள மனநிலை குறித்தும்
ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

இன்றையதினம்(31.10.2026) நடைபெற்ற தேசிய அறிவுஜீவிகள் அமைப்பின்
தேசிய மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.

முந்தைய அரசியல் கலாச்சாரத்தால் பயனடைந்த சில குழுக்கள்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை
ஏற்றுக்கொள்வதில் சிரமப்படுவதாகக் கூறினார்.

அரசின் அரசியல் சீர்திருத்தங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக,  இந்தக் குழுக்கள்
வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகள்,  புனையப்பட்ட குற்றச்சாட்டுகள்
மற்றும் வழக்கத்திற்கு மாறான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக
அவர் குற்றம் சாட்டினார்.

களிமண் உருவங்களில் ஊசிகளைச் செருகும் வழக்கத்தைக் குறிப்பிட்டு,
ஒரு களிமண் உருவத்திற்குத் தீங்கு விளைவிப்பதால் மற்றொருவருக்கு
வலி ஏற்படும் என்று நம்புவதற்கு எத்தகைய சிந்தனை ஒருவருக்கு அமையும் என
ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments