புத்தளம்-உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாடு கிராமத்தில் மீன் தொட்டியில்
விழுந்து சிறுமி ஒருவர் நேற்று (31) பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
டபிள்யூ. தினிதி சேனயா (வயது 1 வருடம் 4 மாதங்கள்) எனும் சிறுமியே இவ்வாறு
உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வீட்டின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்கு அருகாமையில்
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அந்த மீன் தொட்டிக்குள் விழுந்ததில்
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுமியின் தந்தை தொழில் நிமித்தம் வெளியே சென்ற வேளை, சிறுமி
தாயுடன் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
எனினும்இ வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுமியை
காணவில்லை என்பதை அறிந்துகொண்ட சிறுமியின் தாயார் தனது மகளை
அங்கும் இங்குமாக தேடியுள்ளார்.
இதனையடுத்துஇ வீட்டுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மீன் தொட்டிக்குள்
சிறுமி வீழந்து கிடப்பதை கண்ட தாயார் அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த
சிறுமியை மீட்டெடுத்து உடனடியாக கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலைக்கு
கொண்ட சென்ற போதிலும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்துவிட்டதாக அந்த
சிறுமியை பரிசோதனை செய்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம்
ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், பிரேத பிரசோதனையின்
பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

