முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ள கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான், வழக்கை
எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள
உத்தரவிட்டார்.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக
இருந்த இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது,
கொழும்பு தும்புள்ளையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சூழவுள்ள வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸார் இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர்களான மொஹமட் முசம்மில், வீரகுமார திஸாநாயக்க, ஜயந்த சமரவீர,
பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர்பெயரிடப்பட்டுள்ளனர்.

