பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியும், சசெக்ஸ் சீமாட்டியுமான
மேகன் மார்க்கலின் தந்தையான 82 வயதுடைய தோமஸ் மார்கல், குழந்தைகள்
மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைக் காட்டும் படங்களை வைத்திருந்ததாகக்
குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கைது
செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளாக அவர் வாடகைக்கு எடுத்திருந்த லொஸ் ஏஞ்சல்ஸ்
பகுதியில் உள்ள இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் FBI அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையின்படி, அவர் நேற்று(06.11.2026)
நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார். முன்னதாக, தம்மிடம் இத்தகைய
படங்கள் இருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த தோமஸ் மார்கல், அவை ‘அருவருப்பான பொய்கள்’ என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு முதல் தனது தந்தையுடன் தொடர்பைத் துண்டித்துள்ள
மேகன் மார்கல், கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி
தமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குழந்தைகள் குறித்து தாம் கவலைப்படுவதாகவும்
குறிப்பிட்டிருந்தார்.
தனது தந்தையிடமிருந்து ஏன் பெரும்பாலும் விலகியிருந்தார் என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

