அத்தனகலு ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு
ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தனகலு ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பஸ்நாகொட நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வெளியேற்றம் காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திவுலப்பிட்டிய, மிரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா,
மினுவாங்கொடை, ஜா-எல மற்றும் கட்டானை, வத்தளை ஆகிய பிரதேச செயலாளர்
பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு
ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகளிலுள்ள
வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன்
செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ
அதிகாரிகளுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நண்பகல்
12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

