Friday, November 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்

ஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன்
அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு
செய்தமை தொடர்பில்,  அவரது குடும்பத்தினர்,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்றுள்ளது.

இதன்போது அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கைக் மக்களுக்காக எத்தகைய சந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பது தமது பொறுப்பாகும் எனத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சிவராசா அனோஜனை விடுதலை செய்ததற்காக சவூதி அரேபிய அரசுக்கும்இ
அதற்காக சாதி,  மதம்,  கட்சி, நிறம் பேதமின்றித் தலையீடு செய்த அனைவருக்கும்
விசேட நன்றி உரித்தாக வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிவராசா அனோஜன் தற்போது சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது
பெற்றோர் ஜனாதிபதிக்குத் தெரிவித்தனர்.

தமது மகனை மரண தண்டனையிலிருந்து விடுவித்து அனைத்துக்
குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆரம்பம் முதல் தலையீடு செய்த
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோருக்கும்,  சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வாத் தலைமையிலான அதிகாரிகளுக்கும்,  சவூதி அரேபியாவிற்குச் சென்று சட்ட ரீதியான தலையீடுகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் சிவராசா அனோஜனின் தாயார் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியை முதன்முதலில் சந்தித்த சந்தர்ப்பத்தில் வழங்கிய வாக்குறுதியின்படி,
அனோஜனை விடுவிப்பதற்குத் தலையீடு செய்தமைக்கு நன்றியைத் தெரிவித்த சமூக
செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த்,  இந்தக் காலப்பகுதியில் பங்களாதேஷ்
நாட்டைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம்
காரணமாக அனோஜன் சிவராசாவின் பெற்றோர் கடுமையான மன உளைச்சலுக்கு
ஆளாகியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல
விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments