வீட்டு உபயோக மற்றும் வர்த்தக நுகர்வோருக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம்
கட்டங்களாக மீண்டும் தொடங்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்
அறிவித்துள்ளது.
இலங்கைக்கு 3, 000 மெட்ரிக் டொன்களுக்கும் அதிகமான எரிவாயுவை
ஏற்றிக்கொண்டு கப்பல்கள் வந்தடைந்ததை தொடர்ந்து, எரிவாயு சிலிண்டர்
விநியோகத்தை படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுத்துள்ளதாகவும்
அந்நிறுவனம் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, வீட்டு உபயோக மற்றும் வர்த்தக நுகர்வோர் இருவருக்கும் எரிவாயு
சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகஇ விநியோகம் பல கட்டங்களாக
மீண்டும் தொடங்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில், விற்பனை நிலையங்களுக்கு செல்வதற்கு முன்பு எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அந்நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
எரிவாயு இருப்பு குறித்த துல்லியமான தகவல்களை பெற, நுகர்வோர் தங்களுக்கு
அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு விற்பனையாளரை தொடர்பு
கொள்ளலாம் அல்லது நிறுவனத்தின் உதவி எண்ணான 1345-க்கு அழைக்கலாம்
என்றும் அறிவித்துள்ளது.

