பலாலி பகுதியில் நேற்று (13) விமானத்தை தாக்கும் வெடி குண்டுகளின் பாகங்கள்
பல மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் இராணுவ முகாமின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு
கிடங்கு வெட்டியபோது குறித்த பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
பின்னர் மோப்ப நாயின் உதவியுடன், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும்
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பங்குபற்றுதலுடன் குறித்த வெடி
பொருட்கள் மீட்கப்பட்டன.
இதன்போது விமானத்தை தாக்கும் ஏவுகணையின் 22 பாகங்கள் மீட்கப்பட்டன.
அத்துடன் இனந்தெரியாத வெடிபொருட்களின் பாகங்களும் மீட்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.

