லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (16) காலை 10.00 மணிக்கு அதிகாரசபைக்கு சமுகமளித்து
இது தொடர்பான விளக்கங்களைச் சமர்ப்பிக்குமாறு அந்நிறுவன அதிகாரிகளுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் எரிவாயு
விலைகளை அதிகரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, இதுவரை 4, 965 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் நிறை கொண்ட
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1, 775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு
அதன் புதிய விலை 6,740 ரூபாவாக உயர்ந்துள்ளது.
அதேபோன்று, 1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் நிறை கொண்ட சமையல்
எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய
விலை 2, 720 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலைகள் கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி
கட்டணங்கள் ஆகியவற்றுக்கு அமைய, நாட்டிற்கு எரிவாயு கையிருப்பை
கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளமையாலேயே இந்த விலைத்
திருத்தத்தை மேற்கொள்ள நேரிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

