Saturday, November 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநெல்லியடியில் பொலிஸாரின் தடைகளைமீறி மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்

நெல்லியடியில் பொலிஸாரின் தடைகளைமீறி மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்

நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்
குழுவினரால் நேற்றைய தினம்(20) வெள்ளிக்கிழமை மாலை அமைக்கப்பட்ட
மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது,
ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது.

இதையடுத்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஐவரை பொலிஸ் நிலையத்துக்கு
அழைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை,
கொட்டகைகளை பொலிஸார் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் ஏற்பாட்டுக் குழுவினர், மீண்டும் அதே இடத்தில்
கொட்டகை அமைக்க முற்பட்டபோது பொலிஸாருடன் மீண்டும் வாக்குவாதம்
ஏற்பட்டது.

பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியிலும், நெல்லியடி நகரில் நினைவேந்தல்
கொட்டகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் வாரம்
உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments