Tuesday, November 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி வயோதிபர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி வயோதிபர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (23.11.2026) மாலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு –
வட்டுவாகல் வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  முல்லைத்தீவு நகரிலிருந்து
வட்டுவாகல் நோக்கிப் ஹெப் ரக வாகனமொன்று பயணித்துள்ளது.

இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபர் வீதியின்
மறுபக்கத்திற்குத் திரும்ப முற்பட்டபோது அவர் மீது ஹெப் ரக வாகனம்
மோதியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, படுகாயமடைந்த வயோதிபர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு
உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு போக்குவரத்துப் பொலிஸார் விபத்து
தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments