Thursday, November 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைடயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை
ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு,
எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம
முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான்
செனவிரத்ன, முன்னர் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த பிரதிவாதி, தற்போது
தனது நிலைப்பாட்டை மாற்றி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளதாக
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிவான், தண்டனை அறிவிப்பதற்காக வழக்கை
ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். மேலும், பிரதிவாதியின்
கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

2015 ஜூலை 16 முதல் 2016 ஜூலை 16 வரையான காலப்பகுதியில்
செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாக, குடிவரவு மற்றும்
குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்
டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments