Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாபட்டாசு ஆலை வெடித்து சிதறியது

பட்டாசு ஆலை வெடித்து சிதறியது

இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள
பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில், 10 தொழிலாளர்கள் உடல் கருகி
உயிரிழந்துள்ளனர்.

இந்த வெடி விபத்தின்போது குறித்த பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமான
பட்டாசு உற்பத்தி அறைகளில்  50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததாக
இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில்  திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.

அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவிய நிலையில் 8 அறைகள் முற்றிலுமாக
தீக்கிரையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

தீக்காயங்களுக்குள்ளானவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

பட்டாசுகளின் உராய்வின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற் கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments