இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வான் மற்றும் விண்வெளி சக்தி மாநாட்டில் கலந்துகொண்டார்.
‘தேசிய வான் மற்றும் விண்வெளி சக்தியை தயார்ப்படுத்தல் மற்றும் மீள்திறனை உருவாக்குதல்’ எனும் கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்புத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இராணுவப் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
இந்த நிகழ்வின்போது எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பல முக்கிய பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வராவைச் சந்தித்தார்.
அங்கு அவர்கள் கடல்சார் கள விழிப்புணர்வு தொடர்பான கூட்டு முயற்சிகள் மற்றும்
அவுஸ்திரேலிய இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சிக்கான வாய்ப்புகளை பற்றி கலந்துரையாடினர்.
உதேனி ராஜபக்ஷ இரு விமானப்படைகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ராபர்ட் சிப்மேனை சந்தித்தார்.

