Thursday, May 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாலைத்தீவுக்கான அரசு முறைப் பயணமாக
நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில்,  நான்கு அமைச்சுகளுக்கு
பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதாரம்,  பாதுகாப்பு மற்றும் நிதி,
திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகங்களுக்கும், அமைச்சர்
விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலா அமைச்சகத்திற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ நிதி,  திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும்,  டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சரான எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார அமைச்சராகவும்,  பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர பாதுகாப்பு அமைச்சராகவும்,வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியுறவு,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments