Monday, September 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை

கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை

கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இதன்படி மேல்,சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் காலி,மாத்தறை, கண்டி,
நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குமே இந்த சிவப்பு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை படிப்படியாக நாடு முழுவதும் நிலவுவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளைஇ மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா மற்றும் மன்னார்
மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த
மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments